இதுக்கு தான் இவ்வளவு பில்டப் கொடுத்தீங்களா - கொந்தளித்த இந்திய ரசிகர்கள்

Anupriyamkumaresan
in கிரிக்கெட்Report this article
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி, ரசிகர்களின் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்காமல் விக்கெட்டை இழந்து வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 26 ரன்களும், ஹர்திக் பாண்டியா 23 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய நியூசிலாந்து அணி, பந்துவீச்சை போன்று பேட்டிங்கில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஈசியாக ரன்னும் குவித்ததன் மூலம் 14.3 ஓவரிலேயே இலக்கை ஈசியாக எட்டிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் 49 ரன்களும், கேன் வில்லியம்சன் 33* ரன்களும் எடுத்தனர்.
இந்தநிலையில், இந்த போட்டியில் மிக மோசமான தோல்வியை தழுவிய இந்திய அணி, ரசிகர்களின் கடும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த போட்டியில் மிக மோசமாக விளையாடிய விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல் ராகுல் போன்ற சீனியர் வீரர்களை இந்திய ரசிகர்களே விமர்சித்தே வருகின்றனர். அதே போல் மறுபுறம் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணிக்கு அதிகமான பாராட்டுக்களும் குவிந்து வருகிறது