நியூசிலாந்து அணியின் தோல்விக்கு இது தான் காரணம் - மெக்கல்லம் ஓபன் டாக் : ரசிகர்கள் சோகம்

newzealand team loss match Brendon McCullum
By Anupriyamkumaresan Nov 17, 2021 07:47 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

பேட்டிங்கில் சொதப்பியதே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நியூசிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் என முன்னாள் நியூசிலாந்து வீரரான மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும், இங்கிலாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணியும் இறுதி போட்டியில் மோதியது. உலக சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டியின் துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்து அணியை ஈசியாக வீழ்த்தி முதன்முறையாக டி.20 உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது.

நியூசிலாந்து அணியின் தோல்விக்கு இது தான் காரணம் - மெக்கல்லம் ஓபன் டாக் : ரசிகர்கள் சோகம் | Newzealand Team Loss Match Reason Mekkelam Said

இந்தியா, இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிகளை ஈசியாக வீழ்த்திய நியூசிலாந்து அணியால், ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க முடியாததற்கான தங்களது கருத்தை முன்னாள் வீரர்கள் பலரும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், நியூசிலாந்து அணியின் தோல்வி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் நியூசிலாந்து வீரரான பிராண்டன் மெக்கல்லம், பேட்டிங்கில் சொதப்பியதே நியூசிலாந்து அணியின் தோல்விக்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து மெக்கல்லம் பேசுகையில், “இறுதி போட்டியில் நான் மெக்கல்லமிடம் இருந்து அதிகம் எதிர்பார்த்தேன் ஆனால் மெக்கல்லம் 35 பந்துகளில் வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். கப்திலின் நிதான ஆட்டமும், அவர் தனது பங்களிப்பை சரியாக செய்யாததும் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை கொடுத்துவிட்டது.

நியூசிலாந்து அணியின் தோல்விக்கு இது தான் காரணம் - மெக்கல்லம் ஓபன் டாக் : ரசிகர்கள் சோகம் | Newzealand Team Loss Match Reason Mekkelam Said

முதல் 15 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த கப்தில் அதன்பிற்கு எதிர்கொண்ட 20 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். பேட்டிங்கில் நியூசிலாந்து அணி இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் என கருதுகிறேன்.

சாம்பியன் பட்டத்தை வெல்ல சரியான வாய்ப்பு நியூசிலாந்து அணியை தேடி வந்தது, ஆனால் நியூசிலாந்து அணி அதை தவறவிட்டுவிட்டது. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் பதட்டமடைந்து தடுப்பாட்டம் ஆடியது போன்றே எனக்கு தோன்றியது” என்று தெரிவித்தார்.