ஐஎஸ் அமைப்பு நடத்திய கொடூர தாக்குதல்: பதட்டத்தில் நியூசிலாந்து

newzealand supermarket terrorist attack
By Irumporai Sep 03, 2021 07:50 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நியூசிலாந்து நியூலின் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர், அங்கிருந்த ஆறு பேரை சரமாரியாக குத்தினார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை சுட்டு வீழ்த்தினர்.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில்,கடந்த 2011ஆம் ஆண்டு, இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூசிலாந்துக்கு வந்துள்ளதாகவும் அந்த நபரை பயங்கரவாத பட்டியலில் இருந்துள்ளதாக கூறினார்.

மேலும் அந்த மர்ம நபர் ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று அங்கு உள்ளமக்களை தனது கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரை கண்காணித்துவந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

இதில், ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளார். மூவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறினார். அருவருக்கத்தக்க செயல் நடைபெற்றுள்ளதாக கூறிய ஜெசிந்தா ஆர்டெர்ன் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிடம் ஊக்கம் பெற்ற இக்கொள்கை வன்முறையால் ஆனது என பதில் அளித்தார்.

நியூசிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கிறிஸ்ட்சர்ச் மசூதியில் நடைபெற்ற தாக்குதலில் அப்பாவி இஸ்லாமியர்கள் 51 பேரை வெள்ளை நிற இனவாதி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொன்றது குறிப்பிடத்தக்கது.