62 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து! கதறவிட்ட இந்திய அணி

By Fathima Dec 04, 2021 10:24 AM GMT
Report

மும்பையில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 62 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது நியூசிலாந்து.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார், இதன்படி இந்திய வீரர்கள் களமிறங்க 2ம் நாளான இன்று அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 325 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து வீரர்கள் களமிறங்க, வெறும் 62 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.