விடுதியில் திடீர் தீ விபத்து - 10 பேர் உடல்கருகி உயிரிழந்த சோகம்!
நியூசிலாந்தில் உள்ள விடுதி ஒன்றில் திடீரென தீ பற்றி விபத்து ஏற்பட்டதால் 10 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து
நியூசிலாந்து தலைநகரமான வெலிங்டனில் 4 மாடிகள் கொண்டு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

இதில், நேற்று இரவு எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும் தீயணைப்பு துறையினரும் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர், உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது, மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விசாரணை
இந்நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து, இந்த விபத்திற்கான காரணம் அறியப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan