நியூசிலாந்து அருகே தென் பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! 7.7 ரிக்டர் அளவு பதிவு
பிரான்சின் நியூ கலிடோனியா அருகே தென் பசிபிக் கடலில் 7.7 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கருகே உள்ள தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள பகுதி நியூ கலிடோனியா.
இந்த பகுதிக்கு அருகே கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழதில் 7.7 ரிக்டர் அளவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் பசிபிக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அடுத்த 3 மணி நேரத்தில் சுனாமி வரலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் நியூசிலாந்து, நியூ கலிடோனியா, வனடு பகுதிகளுக்கு சுனாமி வர வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
ஆனால் எச்சரிக்கை விடுத்தபடி எந்த பாதிப்பும் நியூசிலாந்து, நியூ கலிடோனியா, வனடு பகுதிகளில் ஏற்படவில்லை. இதனையடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் சுனாமி எச்சரிக்கையை விலக்கிக் கொண்டன.