திடீரென 7.3 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை?
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நிலநடுக்கம்
நியூசிலாந்தில் உள்ள கெர்மாடெக் தீவுகளில் திடீரென்று பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அவை ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இந்திய நேரப்படி 6.11 மணிக்கு நியூசிலாந்தில் உள்ள கெர்மாடெக் தீவுகளில் 10 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
சுனாமி?
மேலும் சுனாமி ஏற்படுவதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை அளிக்கவில்லை. மேலும், உயிர் சேதங்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.
துருக்கி - சிரியாவில் சில தினங்கள் முன் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் இந்த நிலநடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.