நிஜ வாழ்க்கையில் ராட்சசன் கிறிஸ்டோபர் - பெண்களை கடத்தி சுத்தியால் அடித்து கொல்லும் கொடூர சைகோ!!
நியூயார்க்கில், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் கொடூர அரக்கன் இயற்கையாக சிறையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த சைகோ?
நியூயார்க்கை சேர்ந்த ரோட்னி அல்காலா என்ற நபர் தான் இந்த சைகோ கொலைகாரன் ஆவார். ராட்சசன் படத்தை போன்று பெண்களை கடத்தில் கொடூரமாக கொலை செய்வதே இவரது வேலை.
அந்த படத்தில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து சுத்தியால் அடித்து கொலை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த கொலைகாரன் கொலை செய்வதற்கு முன்பாக அப்பெண்களை போட்டோ எடுத்து வைப்பதை வழக்கமாக வைத்துள்ளான். இவனது வீட்டில் இதுவரை 130 பெண்களின் புகைப்படங்கள் சிக்கியுள்ளது.
இதன் மூலம், இவன் இதுவரை 130 பெண்களை கொடூரமாக கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பெண்களை வன்கொடுமை செய்த பின்னர் சுத்தியலால் அடித்து துன்புறுத்தி மகிழ்ச்சி அடையும் அந்த சைக்கோ உயிர் பிரியும் நேரத்திற்கு முன்பாக பெண்களின் காது ஆபரணங்களை பறித்து மறைத்து வைத்துக் கொள்வதும் வழக்கம். அப்படி மறைத்து வைக்கப்பட்டுள்ள காதணிகள் போலீஸாரிடம் சிக்கியிருக்கின்றன.
1968 முதல் 2021 வரை: 1968ஆம் ஆண்டில் 8 வயது சிறுமி, 1973 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அந்த சைக்கோ சிறைதண்டனை அனுபவித்தான்.
1 979 ஆம் ஆண்டில் 12 வயது சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக 1980இல் அவனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது . நான்காண்டுகளில் இந்த தண்டனையும் ரத்தாகிவிட்டது. 2010ஆம் ஆண்டில் டிஎன்ஏ பரிட்சை மூலம் குற்றம் உறுதி ஆனதால் மீண்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதே ஆண்டில் மேலும் நான்கு பெண்களின் கொலை வழக்கில் அவனுக்கு மரண தண்டனை நிரூபணமானது. 2013ம் ஆண்டில் மேலும் இரண்டு பெண்களின் கொலை வழக்கும் உறுதியானது. 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மறைத்து வைத்திருந்த பெண்களின் காதணிகள்தான் அவன் செய்த குற்றத்தை உறுதிப்படுத்தின.
அவனுடைய வீட்டிலிருந்து நூற்றுக்கும் மேலான பெண்களின் போட்டோக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்தனை பெண்களும் காணாமல் போனதாக வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 130 பெண்களை அவன் கொடூரமாக கொலை செய்து இருப்பது அம்பலமானது.
77 வயதான அந்த சைக்கோ ரோட்னி ஜேம்ஸ் அல்காலா கலிபோர்னியாவில் உள்ள சிறையில் இயற்கை மரணம் எய்திருக்கிறான்.
மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவன் இயற்கையாக மரணம் அடைந்து விட்டதாக சிறை அதிகாரிகள் தற்போது
தெரிவித்துள்ளனர்.