இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால்.. வன்மம் - செய்தித்தாளுக்கு முதலமைச்சர் கடும் கண்டனம்!

M K Stalin Tamil nadu
By Sumathi Aug 31, 2023 09:38 AM GMT
Report

காலை உணவு திட்டத்தை விமர்சித்து செய்தி வெளியிட்ட செய்தித்தாளுக்கு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காலை உணவு திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால்.. வன்மம் - செய்தித்தாளுக்கு முதலமைச்சர் கடும் கண்டனம்! | Newspaper Criticized Breakfast Scheme Cm Stalin

தமிழகத்தில் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தால் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர் இந்நிலையில், பிரபல நாளிதழ் ஒன்றில் காலை உணவு திட்டம் ’மாணவர்களுக்கு டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது’ என்ற தலைப்பில் செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 முதலமைச்சர் கண்டனம்

இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ”உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.

'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி. நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால்,

நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!” என தெரிவித்துள்ளார்.