செய்தி வாசித்த போது நேரலையில் அழுத வாசிப்பாளர் - எல்லாம் இதுதான் காரணம்

Russo-Ukrainian War
By Petchi Avudaiappan Apr 22, 2022 09:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஜப்பானைச் சேர்ந்த ஒரு செய்தி வாசிப்பாளர் நேரலையில் செய்தி வாசித்த போது அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. இருதரப்பிலும் ஏராளமான பொருட்சேதமும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டுள்ள நிலையில்  உக்ரைனில் உள்ள புச்சா பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷ்ய அதிபர் புதின் கௌரவப்படுத்தினார்.

இதுதொடர்பான செய்தி ஒன்று ஜப்பானைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பானது. அந்த செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ மட்சுவோ என்பவர் நேரலையில்  தடுமாறி அழுதார். சிறிது நேரம் கழித்து அவர் நிதானமாகி செய்தி வாசிப்பை தொடர்ந்தார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்கள் வைரலான நிலையில் மக்களின் மனதில் இந்த போர் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான சிறந்த உதாரணம் இது பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.