பிரபல தமிழ் பெண் செய்தி வாசிப்பாளர் மீது வழக்குப்பதிவு - நடந்தது என்ன?
பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரும், பாஜக கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சவுதா மணி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
மதக்கலவரத்தை தூண்டும், விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டதாக சவுதா மணி மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தருக்கிறார்கள்.
மதம் தொடர்பாக ஒருவர் சர்ச்சையான வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி பதிவிட்டு "தைரியமா? விடியலுக்கா?" என்று கேள்வி எழுப்பி திமுக அரசை சாடியிருந்தார்.
இதனையடுத்து சவுதா மணி மீது கலகம் செய்ய தூண்டி விடுதல் என்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.