இந்த செய்தி உங்களுக்கு தெரியுமா? கமல்ஹாசன் கட்சியை கிண்டலடித்து டுவிட்

kamal party sumanth raman
By Jon Mar 10, 2021 11:38 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மூன்றாவது அணி களமிறங்குகிறது. இக்கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் இடம்பிடித்துள்ளது, இரு அணிகளுக்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசியல் விமர்சகரான சுமந்த் சி.ராமன் டுவிட்டர் பதிவில், “உங்களுக்கு செய்தி தெரியுமா? மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்திற்கு உணவு டெலிவரி செய்ய சென்ற ஸ்விகி டெலிவரி ஊழியருக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம்” - வாட்ஸ் அப் பார்வேர்டு மெசேஜ் என குறிப்பிட்டு ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு வைரலாகி வரும் நிலையில், ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் டுவிட் செய்து வருகின்றனர்.