ஊடகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் உதவிகள் வழங்கிடுக! - வைகோ

news channels papers reportesrs press peoples vaiko request
By Anupriyamkumaresan Jun 03, 2021 10:31 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

ஊடகங்களின் செய்தியாளர்களை முறைப்படுத்தி உதவிகள் வழங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்களின் செய்தியாளர்களை, கொரோனா எதிர்ப்புப் போரின் முன்களப் பணியாளர்களாக அறிவித்து, உடனடி உதவித்தொகையாக 5000 ரூபாயும், கொரோனா தாக்கி உயிர் இழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தியும் ஆணை பிறப்பித்த, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, செய்தியாளர்கள் நெஞ்சார்ந்த நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து வரவேற்று இருக்கின்றார்கள் என தெரித்துள்ளார்.

ஊடகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் உதவிகள் வழங்கிடுக! - வைகோ | News Channels Papers Vaiko Request Cm

ஆனால், தமிழ்நாடு முழுமையும் சேர்த்து, அரசு அடையாள அட்டை பெற்று இருக்கின்ற சுமார் 1500 பேர்கள் மட்டுமே இந்த வளையத்திற்குள் வருகின்றார்கள் என்றும் முறையாக விண்ணப்பித்த பலருக்கும் இன்னும் அடையாள அட்டை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, அரசு ஏற்பு அளித்து இருக்கின்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்களின் அடையாள அட்டை பெற்று இருக்கின்ற துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள், படக்கலைஞர்கள் அனைவருக்கும், அரசு உதவித் தொகை கிடைத்திட ஆவன செய்திட வேண்டும் என, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

ஊடகங்களில் பணிபுரியும் அனைவருக்கும் உதவிகள் வழங்கிடுக! - வைகோ | News Channels Papers Vaiko Request Cm