இனிமேலும் தள்ளிப்போட முடியாது - 42 வயதில் அனுஷ்காவிற்கு ரெடியாகும் திருமணம்..? இது confirm'ஆ..?

Anushka Shetty Actress
By Karthick Feb 08, 2024 09:14 AM GMT
Report

நடிகை அனுஷ்காவின் திருமணம் குறித்து தகவல்கள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றது.

அனுஷ்கா

தென்னிந்திய சினிமாவில் பெரிய ஆளுமையை செலுத்தியவர் அனுஷ்கா. கதையின் நாயகியாக நடிப்பில் மிரட்டுவது, ஹீரோயினாக கிளாமரில் கலக்குவது என அநேக கதாபாத்திரங்களில் நடித்து பெரிய பெரிய ஹிட் படங்களில் கொடுத்துள்ளார்.

news-about-anushka-shetty-marriage

தொடர்ந்து நடித்து வந்த அனுஷ்கா, படத்திற்காக வெயிட் போட்டு, அதனால் பெரும் இன்னல்களை அனுபவித்தார். கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.

news-about-anushka-shetty-marriage

கடந்த ஆண்டு நவீன் பாலிஷெட்டியுடன் இணைந்து நடித்த "Mrs.ஷெட்டி Mr.பாலிஷெட்டி" படம் தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது மலையாளத்தில் ஜெய் சூர்யாவுடன் இணைந்து "கத்தனார் - The Wild Sorcerer" படத்தில் நடித்து வருகின்றார்.

பிரபல நடிகரை கரம்பிடிக்கப்போகும் அனுஷ்கா - கொண்டாடும் ரசிகர்கள்!

பிரபல நடிகரை கரம்பிடிக்கப்போகும் அனுஷ்கா - கொண்டாடும் ரசிகர்கள்!

திருமணம்

தற்போது 42 வயதை எட்டியுள்ள அனுஷ்காவின் திருமணம் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன. பிரபாஸுடன் விரைவில் அனுஷ்காவிற்கு திருமணம் என பல தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன.

news-about-anushka-shetty-marriage

இருப்பினும் இது வரை அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை. தற்போது மீண்டும், பஞ்சாபை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவருடன் அனுஷ்காவிற்கு திருமணம் நடைபெறவுள்ளது செய்தி வெளியாக அது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இருப்பினும், இதுவும் உறுதிப்படுத்தபட்ட தகவல் அல்ல.

news-about-anushka-shetty-marriage

இது குறித்தும் அனுஷ்கா தரப்பில் இருந்து எந்த வித உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் கிடைக்கவில்லை. அனுஷ்கா தனது படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கின்றார் என்று தான் உறுதியான தகவல் கிடைக்கின்றன.