21 வயசுதான்.. கணவர் வேலைக்கு புறப்பட்டதால் ஆத்திரம் - தலை தீபாவளியில் சோகம்!
தலை தீபாவளிக்கு வந்த புதுப்பெண் தற்கொலை செய்துள்ளார்.
குடும்ப விவகாரம்
கடலூர், களத்துப்பட்டியை சேர்ந்தவர் மச்சக்காளை மகள் ரூபியா 21. இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையம்பட்டியை சேர்ந்த பாண்டி 30, என்பவருக்கும் திருமணம் நடந்தது.
பாண்டி திருச்சியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில், தலை தீபாவளியை கொண்டாட இருவரும் களத்துப்பட்டி வந்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டம் முடிந்து பாண்டி ஊருக்கு கிளம்பியுள்ளார்.
புதுப்பெண் தற்கொலை
இன்னும் சில நாள் தந்தை வீட்டில் இருந்து விட்டு செல்லலாம் என்று ரூபியா கூறிய நிலையில், தான் பணிக்கு செல்ல வேண்டும் என்று கூறி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரூபியா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து
ரூபிகாவின் சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 3 மாதத்தில் இறந்ததால் ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.