காதலன், கணவன் 2 பேரும் வேண்டும் - போலீஸிடம் அடம்பிடித்த மணமகள்

Viral Video Uttar Pradesh Marriage
By Sumathi Apr 03, 2023 10:28 AM GMT
Report

புதுமண பெண் ஒருவர் தனது காதலனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ரகளை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மணப்பெண்

உத்தரப்பிரதேசம், சிர்காவ் என்ற கிராமத்தில் பெண் ஒருவருக்கு அவரின் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைத்தனர். ஆனால், அந்தப் பெண் ஏற்கெனவே ஒருவரைக் காதலித்திருக்கிறார். அதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காதலன், கணவன் 2 பேரும் வேண்டும் - போலீஸிடம் அடம்பிடித்த மணமகள் | Newlywed Drunk Bride Creates Drama To Marry Lover

இந்நிலையில், திருமணம் ஆன நிலையில் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் தன் காதலனுடன் வெளியேற மணக்கோலத்தில் புறப்பட்டு காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். மேலும், காதலனுடன் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போலீஸிடம் ரகளை

நான் இருவரையும் திருமணம் செய்துகொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அப்போது அங்கு அந்தப் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அதனை கேட்காத மணமகள் ஆத்திரத்தில் செல்போனை கீழே போட்டு உடைத்துள்ளார்.

தொடர்ந்து அப்பெண்ணை மீட்டு அவரை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருப்பதாக இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். இதற்கிடையில், அந்தப் பெண்ணின் கணவரும் காவல் நிலையம் வந்து என் மனைவி தன்னுடைய காதலனையும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியது குறிப்பிடத்தக்கது.