கிடா விருந்து தயாரான நிலையில் புதுப்பெண் கொலை!! கதறிய பெற்றோர்- நடந்தது என்ன?

investigation
By Fathima Aug 15, 2021 01:37 PM GMT
Report

தமிழகத்தில் 19 வயது பெண்ணை திருமணம் செய்த 35 வயது மாப்பிள்ளை அவரை துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்த வாட்டாத்திக்கொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி பிரபாகரன்- காந்தி.

இந்த தம்பதியின் இரண்டாவது மகளான 19 வயது மதிக்கத்தக்க ஜோதி என்பவருக்கும், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க மணிகண்ட பிரபு என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

மணிகண்ட பிரபு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் கத்தாரில் வேலை செய்து வந்ததால், திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

அதன் பின் ஜோதியை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போதே, ஏன் இவ்வளவு அவசரமாக தனக்கு ஜோதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற சந்தேகம் மணிகண்ட பிரபுவிற்கு வந்துள்ளது.

கிடா விருந்து தயாரான நிலையில் புதுப்பெண் கொலை!! கதறிய பெற்றோர்- நடந்தது என்ன? | Newly Married Girl Killed By Husband

இதனால், திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே, மனைவி மீது மணிகண்ட பிரபு சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து, திருமணத்துக்கு பின்னர் மனைவி ஜோதியுடன் மணிகண்ட பிரபு பட்டுக்கோட்டை கொண்டிக்குளம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜோதியின் உறவினரான, பேராவூரணி அடுத்த ஊமத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு, கணவன் மனைவி இருவரும் ஆடி விருந்துக்கு சென்றுள்ளனர்.

வீட்டில் அனைவருக்கும் கிடா விருந்து தயாரான நிலையில் புதுமண தம்பதியர் இருவரும் காலை 10 மணி அளவில் அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுவருவதாக கூறி சென்றுள்ளனர்.

ஆனால், மணிகண்டன் சிவன் கோவிலுக்குச் செல்லாமல் ஏரிக்கரை வழியாக பேராவூரணி நோக்கி ஜோதியை அழைத்து சென்றுள்ளான்.

ஜோதி கோயிலுக்கு செல்லாமல் எங்கு செல்கிறீர்கள் எனக் கேட்ட போது அங்கிருந்த கருவேலமரக்கட்டையை எடுத்து ஜோதியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக ஜோதி சம்பவ இடத்திலே தலைசிதறி பரிதாபமாக உயிரிழந்தார். கோவிலுக்கு சென்ற அவர்கள் வெகு நேரமாகியும் திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் தேடிய போது, ஜோதி இறந்துகிடப்பது தெரியவர, அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த பொலிசார், உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முதற்கட்ட விசாரணையில், திருமணம் நடந்து மூன்று மாதமான நிலையில் ஜோதியின் கணவர் மணிகண்டன் சைக்கோ போல் நடந்து கொண்டு, தங்கள் மகள் கொடுமைப்படுத்தி வந்ததுமட்டுமின்றி, கூடுதல் நகை பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக ஜோதியின் பெற்றோர் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மணிகண்ட பிரபுவை தேடி வருகின்றனர்.