ஆபாச படத்தில் வருவது போல் செய்ய கட்டாயப்படுத்திய கணவன் - புதுமணப்பெண் எடுத்த முடிவு
ஆபாச படத்தில் வருவது போல் செய்ய கணவர் காட்டாயப்படுத்தியதால் மனைவி விபரீத முடிவெடுத்துள்ளார்.
இயற்கைக்கு மாறான உறவு
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள கஜுவாக்காவைச் சேர்ந்தவர் சிக்கிலா வசந்தா(23). இவருக்கு கடந்த ஆண்டு நாகேந்திர பாபு(32) என்ற நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆபாச படங்களுக்கு அடிமையான நாகேந்திர பாபு, அந்த படங்களை மனைவிக்கு காட்டி அதில் வருவது போல் முயற்சி செய்து பார்க்கலாம் என இயற்கைக்கு மாறான உறவுக்கு தனது மனைவியை கட்டாயப்படுத்தியுள்ளார்.
உயிரிழப்பு
மேலும், மாதவிடாய் காலத்தில் மனைவியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டதில், அவருக்கு அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த வசந்தா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து இது குறித்து அவர்களிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து மாப்பிள்ளைக்கு கவுன்சிலிங் ஏற்பாடு செய்து, மீண்டும் வசந்தாவை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் கவுன்சிலிங் அளித்தும் எந்த பயனில்லாமல் மீண்டும் வசந்தாவை துன்புறுத்தியுள்ளார். இனிஅவருடன் வாழ முடியாது என முடிவெடுத்த வசந்தா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோபாலப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.