மலேசியாவுக்கு ஹனிமூன் சென்ற புதுமணத் தம்பதி..சடலமாக வீடு திரும்பிய கொடூரம்- நடந்தது என்ன?
மலேசியாவுக்கு ஹனிமூன் சென்ற புதுமணத் தம்பதி விபத்தில் சிக்கிப் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுமணத் தம்பதி
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவைச் சேர்ந்தவர் நிகில். இவருக்கும் அனு என்கிற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஹனிமூனுக்கு மலேசியாவுக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை காரில் திருவனந்தபுரத்திற்குத் திரும்பியுள்ளனர்.அப்போது பத்தினம்திட்டாவில் கார் வந்த போது எதிரே வந்த பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே புதுமணத் தம்பதி உயிரிழந்தனர்.
ஹனிமூன்
இந்த சம்பவம் குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் புதுமணத் தம்பதி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் ஓட்டுநர் சற்று தூங்கியதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.