ஹனிமூன் சென்ற இடத்தில் குதிரை சவாரி செய்த புதுமாப்பிள்ளை - பரிதாப பலி!

Accident Mumbai Death
By Sumathi 2 மாதங்கள் முன்
Report

புதுமாப்பிள்ளை குதிரை சவாரி செய்யும் போது தவறி விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனிலவு

மும்பை முகமது அலி ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது காசிப் இம்தியாஸ் சேக் (23). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தனது மனைவியுடன் மும்பை அருகே உள்ள மாதேரான் மலை வாசஸ்தலத்துக்கு தேனிலவுக்கு சென்றார்.

ஹனிமூன் சென்ற இடத்தில் குதிரை சவாரி செய்த புதுமாப்பிள்ளை - பரிதாப பலி! | Newly Groom Death Honeymoon While Riding A Horse

சம்பவத்தன்று புதுமணத்தம்பதி தனித்தனியாக குதிரையில் மாதேரான் மலை அழகை சுற்றிப்பார்த்து கொண்டு இருந்தனர். முகமது காசிப் இம்தியாஸ் சேக் சென்ற குதிரை திடீரென வேகமாக ஓடத் தொடங்கியது.

பரிதாபம்

இதனால் அவர் நிலைதடுமாறி குதிரையில் இருந்து கீழே விழுந்தார். வாலிபருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இதுகுறித்து காவல் அதிகாரி சேகர் லாவே, குதிரை சவாரி செய்யும் பயணிகளுக்கு ஹெல்மெட் வழங்க வேண்டும் என்ற விதிமுறை பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. இதை பின்பற்றாத சுற்றுலாவாசிகள் மற்றும் குதிரைக்காரர்களுக்கு கடும் அபராதம் விதிக்க ஆவண செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.