கும்பகோணம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விபத்து

kumbakonam bridge collapsed kollidam river
By Swetha Subash Jan 22, 2022 12:16 PM GMT
Report

கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.

கடந்த 2018-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.

தஞ்சாவூர் - விக்ரவாண்டியை இணைக்கும் வகையில் புதிதாக தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

கொள்ளிடம் ஆற்றில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. சுமார் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.5 கி.மீ நீளத்திற்கு இந்த பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் 5 மற்றும் 6-வது தூண்களை இணைக்கும் வகையில் நேற்று கான்கிரீட் போட்டுள்ளனர். இந்த கான்கிரீட் நேற்று இரவு இடிந்து விழுந்துள்ளது.

கிட்டத்தட்ட சுமார் 250 நீளத்திற்கு இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தற்போது தனியார் கட்டுமான நிறுவன அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.