ஒரு முடியால் வந்த பெரும் பிரச்சனை; சோகத்தில் தவிக்கும் நாடு - என்ன நடக்கிறது?

By Jiyath Nov 30, 2023 05:10 AM GMT
Report

வடகொரியா மக்கள் முடி உதிர்வு பிரச்சனையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வடகொரியா 

உலகின் மர்மமான ஒரு நாடாக வடகொரியா உள்ளது. அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அதிகளவில் வெளியில் தெரிவதில்லை. ஏனெனில் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு முடியால் வந்த பெரும் பிரச்சனை; சோகத்தில் தவிக்கும் நாடு - என்ன நடக்கிறது? | Newest Problem Growing Hair Loss In North Koreans

அதற்கு காரணம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். வடகொரியாவில் அவர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவர் விதிக்கும் கட்டுப்பாடுகளால் அந்நாட்டு மக்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தற்போது வடகொரியா மக்கள் மற்றொரு பெரும் பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். அதுதான் முடி உதிர்தல். வடகொரிய மக்களின் தலைமுடி வேகமாக உதிர்கிறதாம். இதனால் தங்களது தலை சீக்கிரமே வழுக்கையாகிவிடுமே என்ற அச்சத்தில் உள்ளனர்.

மசூதி தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறதா? கோயில் பஜனைகளால் ஏற்படுவதில்லையா? - நீதிமன்றம் அதிரடி!

மசூதி தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறதா? கோயில் பஜனைகளால் ஏற்படுவதில்லையா? - நீதிமன்றம் அதிரடி!

முடி உதிர்வு

நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, வட கொரியாவில் முடி உதிர்தல் தொற்றுநோய் வேகமாகப் பரவுகிறது என்று தென் கொரிய நிபுணர்கள் கூறுகின்றனர். வட கொரியாவில் பயன்படுத்தப்படும் சோப்பு மற்றும் சலவை சோப்புகளே அதற்கு காரணம் என நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு முடியால் வந்த பெரும் பிரச்சனை; சோகத்தில் தவிக்கும் நாடு - என்ன நடக்கிறது? | Newest Problem Growing Hair Loss In North Koreans

அந்த சோப்பு மற்றும் சலவை சோப்புகளில் அதிக அளவு ரசாயனங்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வடகொரியாவில் அனைத்து ஆண்களும் ஆயுதப்படையில் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனவே பெரும்பாலான ஆண்கள் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதால், அவர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சினை அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.