பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று: உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்

COVID-19
By Fathima Sep 08, 2026 06:49 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிறந்த பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சையளித்து மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கும் தொற்று உறுதியானது.

அத்துடன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககூடிய செப்சிஸ் நோயாலும் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதனால் குழந்தையின் உடல் உள்ளுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருந்தது, குழந்தையின் உடல்நிலை குறித்து அறிந்து கொண்ட மருத்துவர்கள் குழுவினர் தீவிர கண்காணிப்பில் அனுமதித்தனர்.

பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று: உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள் | Newborn Baby Infected With Coronavirus

தனியார் மருத்துவமனையின் குழந்தை நல தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் சாந்தனு ரே மற்றும் அவரது குழுவினர் குழந்தையின் நோய் பாதிப்பை கண்டறிந்து அதற்கேற்ற மருத்துவ சிகிச்சையை தொடங்கினர்.

குழந்தைக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு நரம்பு வழியாக நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டன.

தொடர் கண்காணிப்பால் குழந்தையின் உடலிலிருந்து தொற்றுகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது, குழந்தையும் பூரண குணமடைந்து பெற்றொருடன் வீடு திரும்பியுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening