இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடிப்போம்: சவால் விடும் நியூசி. வீரர்

newzealand T20 World Cup Devon Conway
By Irumporai Oct 02, 2021 08:48 AM GMT
Report

இந்தியாவை டெஸ்ட் தொடரில் சொந்தமண்ணில் தோற்கடிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் உள்ளதாக நியூசி. வீரர் டெவோன் கான்வே கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க உள்ளது .

கான்பூர், மும்பையில் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி டிசம்பர் 7-ல் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்து நியூசிலாந் வீரர் டெவோன் கான்வே அளித்துள்ள பேட்டியில்:

இந்தியாவை டெஸ்ட் தொடரில் தோற்கடிக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றோம். இதை நாங்கள் அடையவேண்டும். இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்ததை விடவும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பது சவாலானதாகும்.

இந்தியாவில் நடக்க இருக்கும் தொடரில் எங்களை நிரூபிக்க முயல்வோம். இந்த போட்டியில் ரன்கள் எடுக்க முயற்சி செய்யாவிட்டால் சிக்கலாகிவிடும். ஒரு திட்டம் வகுத்து அதைப் பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.