“ஏப்பா..எது எதுக்கு ரிவ்யூ கேக்கனும்னு உங்களுக்கு வெவஸ்த்த இல்லயா..” - வைரலாகும் வீடியோ பதிவு

new zealand bangladesh test match review video
By Swetha Subash Jan 04, 2022 09:55 AM GMT
Report

நியூசிலாந்து - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி வலுவான நிலையில் உள்ளது.

நியூசிலாந்து பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 328 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் ஆடிய பங்களாதேஷ் அணி 458 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து நியூசிலாந்து அணி எபாதத் ஹூசைன் பந்துவீச்சில் தடுமாறியது.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 147 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது நியூசிலாந்து அணி 90 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த சமயத்தில் பங்களாதேஷ் வீரர் தஸ்கின் அகமத் ராஸ் டெய்லருக்கு பந்துவீசினார்.

அப்போது அவர் பேட்டில் பட்ட பந்திற்கு பங்களாதேஷ் வீரர்கள் எல்பிடபிள்யூ கேட்டனர். அதை நடுவர் மறுத்தார். உடனடியாக பங்களாதேஷ் வீரர்கள் இதற்கு ரிவ்யூ கேட்டனர்.

அப்போது காண்பிக்கப்பட்ட ரீப்ளேவில் பந்து பேட்டில் படவேயில்லை என்று தெளிவாக தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,“கிரிக்கெட் வரலாற்றில் எடுக்கப்பட்ட மோசமான ரிவ்யூ இதுவாக தான் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த வீடியோ பதிவை பலரும் பார்த்து இந்த ரிவ்யூவை மோசமானது என்று கூறி வருகின்றனர்.