மளமளவென சரிந்த விக்கெட் - இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறும் நியூசிலாந்து அணி
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது கிரிக்கெட் போட்டியில் விக்கெட்டை இழந்து திணறி வருகின்றது.
முடிவை மறந்த ரோகித் சர்மா
நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவுடன் நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையடுத்து இரண்டாவது போட்டி சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன் இந்தியா அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்ற பின் தனது முடிவை மறந்து தவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து அணி வீரர்கள் திணறல்
இந்த நிலையில் முதலில் புவுலிங்கை தேர்வு செய்த இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறி வருகின்றனர்.
தொடக்கத்தில் களம் இறங்கிய பின் ஆலான் ரன் எதுவும் எடுக்காமல் முகமது ஷமி வீசிய பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதே போன்று அடுத்தடுத்து வந்த நியூசிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து தவித்து வருகின்றனர்.
நியூசிலாந்து அணி 18.5 ஓவர் முடிவில் 56 ரன்களுக்கு 6 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி வருகிறது.
இந்திய அணியில் முகமது ஷமி 3 , ஹர்திக் பாண்டியா 1 , ஷர்துல் தாகூர் 1, முகமது சிராஜ் 1 விக்கெட்டை கைப்பற்றினர்.