உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி!

Thahir
in கிரிக்கெட்Report this article
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.
171 ரன்களில் சுருண்ட இலங்கை
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 41வது போட்டியில் இலங்கை அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வெறும் 171 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பெரேரா 51 ரன்களும், தீக்ஷன்னா 38 ரன்களும் எடுத்தனர்.
அரையிறுதிக்குள் நுழைந்த நியூசிலாந்து
இதன்பின் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துர்த்தி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான டீவன் கான்வே 42 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 45 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் மற்றும் சாப்மன் ஆகியோர் சொதப்பினாலும், டேரியல் மிட்செல் 43 ரன்களும், கிளன் பிலிப்ஸ் 17 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 23.2வது ஓவரில் இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது.
இதனால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.
அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, அரையிறுதி போட்டியில் இந்திய அணியுடன் மோத உள்ளது.