பாகிஸ்தான் சுற்றுப்பயணம் திடீர் ரத்து: கடைசி நேரத்தில் பல்டியடித்த நியூசிலாந்து - ரசிகர்கள் அதிர்ச்சி

Pakistan New Zealand Pak vs NZ
By Irumporai Sep 17, 2021 10:10 AM GMT
Report

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்யஇருந்தது.

ஒருநாள் ஆட்டங்கள் ராவல்பிண்டியிலும் டி20 தொடர் லாகூரிலும் நடைபெறவிருந்தன.ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது. இந்நிலையில் பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது

. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானும் உச்சக்கட்ட பாதுகாப்பை இங்கு கிரிக்கெட் விளையாட வரும் அணிகளுக்கு வழங்கி வருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் அத்தகைய பாதுகாப்பை உறுதி செய்தோம். நியூசிலாந்து பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் பிரதமர் பேசினார். உலகளவில் சிறந்த புலனாய்வு அமைப்பு எங்களிடம் உண்டு.

அதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். ஆனால் கடைசி நேரத்தில் நியூசிலாந்து விலகியதால் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்