நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டி - வீரர்களின் பெயர்கள் அறிவிப்பு...!
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் இந்தியா 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதியில், இந்திய அணி 43.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியையடுத்து, இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான இந்திய கிரிக்கெட் போட்டி
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்து இந்தியாவுக்கு வருகை வந்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 18-ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.
இந்நிலையில், அடுத்த வாரம் தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்கான வலுவான அணிகளை இந்தியா அறிவித்துள்ளது.
India have named strong squads for the limited-overs series against New Zealand starting next week ? pic.twitter.com/DJVq7z6QF8
— ICC (@ICC) January 14, 2023