20 ஓவர் உலக கோப்பை பயிற்சி ஆட்டம் - இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று நேருக்கு நேர் மோதல்

Indian Cricket Team T20 World Cup 2022 New Zealand Cricket Team
By Nandhini Oct 19, 2022 08:11 AM GMT
Report

இன்று நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நேற்று முதல் தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.

மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

இந்திய அணி த்ரில் வெற்றி

கடந்த 17ம் தேதி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் நடந்தது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இப்போட்டியின் கடைசியில், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

இதனையடுத்து, இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

new-zealand-national-cricket-team-india

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

இந்நிலையில் பிரிஸ்பேனில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை நேருக்கு நேர் மோதுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது போல் இந்த ஆட்டத்திலும் இந்திய அணி அசத்தும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.