Saturday, May 17, 2025

காதலை மறக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் - மருந்து போடும் அரசு!

New Zealand Relationship
By Sumathi 2 years ago
Report

‘மறக்க தவிக்கும் நீயும் மறக்க முடியாமல் நானும்’ என கூறிக் கொண்டு இளைஞர்கள் சிலர் தவிக்கின்றன.

காதல் தோல்வி

காதல் தோல்வி ஏற்படுகையில், அந்த உணர்வுகளைப் பலராலும் எளிதில் கடந்துவிட முடிவதில்லை. சோகம், வருத்தம், தாழ்வு மனப்பான்மை, தனிமை என மனவேதனையை அதிகரித்து விடுகிறது. இதனால் காதல் தோல்வியில் சிக்கி அவதியுறும் இளம் தலைமுறையினரை மீட்க,

காதலை மறக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் - மருந்து போடும் அரசு! | New Zealand Love Better Campaign For Breakups

நியூசிலாந்து தனித்துவமான புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது. அதாவது ‘Love Better’ என்ற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது. இதில் பலரும் தங்களது காதல் தோல்வியின் நிஜ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்படி அறிவுற்றுத்தப்படுகின்றனர். அவ்வாறு பகிர்ந்தால் தோல்வியில் உழன்று கொள்பவருக்கு ஆறுதலாக இருக்கும்.

Love Better

தங்களது உணர்வுகளை ஆரோக்கியமாக மாற்ற, இது பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சாரத்தை அந்நாட்டின் சமூக மேம்பாட்டிற்கான இணை அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் அறிவிக்கையில், ``தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்காமல் ஒரு வழி இருப்பதை இளைஞர்கள் அறிந்து கொள்ளவும்,

காதலை மறக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் - மருந்து போடும் அரசு! | New Zealand Love Better Campaign For Breakups

அவர்களின் காயங்களைச் சமாளிக்கவும் அரசு விரும்புகிறது. இந்த பிரசாரத்திற்காக நியூசிலாந்து பணமதிப்பில் 6.4 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். குடும்ப வன்முறையைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ளும் வளர்ந்த நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.