டி20 உலகக்கோப்பையில் இருந்து பிரபல வீரர் விலகல் - ரசிகர்கள் அதிர்ச்சி
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து நியூசிலாந்து அணி வீரர் லோகி பெர்குசன் விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
இந்த போட்டி தொடங்கும் சில நிமிடங்களுக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான லோகி பெர்குசன் நடப்பு டி20 தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவர் முழுங்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக ஆடம் மில்னே அணியில் சேர்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடிய லோகி பெர்குசன் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியில் மிக முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
