புகைப்பிடிக்க கூடாது.. சிகரெட் விற்க நிரந்தர தடை - அரசு அதிரடி!

New Zealand Smoking
By Sumathi Dec 14, 2022 05:13 AM GMT
Report

இளைஞர்கள் புகைப் பிடிக்க நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புகைப்பிடித்தல்

நியூசிலாந்து அரசு நாட்டு மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதைக் குறைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. அதன்படி, 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அல்லது அதற்கு மேல் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்யக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புகைப்பிடிக்க கூடாது.. சிகரெட் விற்க நிரந்தர தடை - அரசு அதிரடி! | New Zealand Imposes Ban On Youth Buying Cigarettes

புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் இளம் வயதினரைக் கட்டுப்படுத்தும் வகையில், சிகரெட் வாங்க வயது வரம்பை நிர்ணயித்து உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் புகைப்பழக்கம் இல்லாத நாடாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

நிரந்தர தடை

இதன்மூலம், சில்லறை விற்பனையில் சிகரெட் புழக்கம் பெருமளவு கட்டுப்படுத்தப்படும் என்றும், தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் என்றும்,

இளைஞர்களுக்கு சிறந்த ஆரோக்கியத்தை ஏற்படுத்தும் என்றும் நியூசிலாந்து சுகாதாரத் துறை கூடுதல் அமைச்சர் ஆயிஷா வர்ரால் தெரிவித்து உள்ளார்.