ஆஸ்திரேலியாவை மிரட்டிய நியூசிலாந்து: 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

T20 World Cup 2022 New Zealand Cricket Team Australia Cricket Team
By Thahir Oct 22, 2022 03:52 PM GMT
Report

ஆஸ்திரேலியா அணியுடன் மோதிய நியூசிலாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டி-20 உலக கோப்பை தொடர் 

எட்டாவது டி-20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதி சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று சூப்பர் 12 சுற்று இன்று தொடங்கியது.

சூப்பர்12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த்து. அந்த அணிக்கு தொடக்க வீரர்களாக டெவன் கான்வே -பின் ஆலன் களமிறங்கினர்.

அதிரடி காட்டிய நியூசிலாந்து வீரர்கள் 

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய பின் ஆலன் ஆஸ்திரேலிய'அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

New Zealand: Huge win by 90 runs

பந்துகளை தொடர்ச்சியாக பவுண்டரி,சிக்சருக்கு பறக்க விட்டார். சிறப்பாக பேட்டிங்க் செய்த பின் ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார் மறுமுனையில் அதிரடியாக பேட்டை சுழற்றிய டெவன் கான்வே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார்.

மறுமுனையில் கேன் வில்லியம்சன் 23, கிளென் பிலிப்ஸ் 13 ரன்களில் ஆட்டமிழந்தாலும் கான்வே தொடர்ந்து அதிரடியாக ரன் குவித்தார். அடுத்துவந்த ஜிம்மி நீஷம் இறுதி கட்டத்தில் சிக்ஸர்களை பறக்க விட்டார்.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது .கான்வே 92 ரன்கள் மற்றும் ஜிம்மி நீஷம் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

திணறிய ஆஸ்திரேலிய வீரர்கள் 

இதனை தொடர்ந்து 201 ரன்கள் இலக்க துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர்-ஆரோன் பின்ச் ஜோடி துவக்கம் அளித்தது.

தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் பறிகொடுத்தனர்.

வார்னர் 5, ஆரோன் பின்ச் 13, மிச்செல் மார்ஷ் 16, கிளென் மேக்ஸ்வெல் 28, மார்க்ஸ் ஸ்டோனிஸ் 7 ரன்களில் வெளியேற 12 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 82 ரங்களுடன் தடுமாறியது.

New Zealand: Huge win by 90 runs

17.1 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி 111 ரன்களுக்கு ஆட்டமிழந்து 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஏ பிரிவில் நியூசிலாந்து அணி 2 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்தது.