2023 பேரழிவு - நியூசிலாந்தை புரட்டிப்போட்ட கேப்ரியல் புயல்... - வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள்...!

Viral Video New Zealand
By Nandhini Feb 14, 2023 08:08 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

நியூசிலாந்தை கேப்ரியல் என்ற புயல் தாக்கியுள்ளது. இந்த புயலால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நியூசிலாந்தை புரட்டிப்போட்ட கேப்ரியல் புயல்

நியூசிலாந்து நாட்டை கேப்ரியல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. கேப்ரியல் புயல் காரணமாக பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால், அந்நாட்டு அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. ஆக்லாந்து மற்றும் நார்த்லேண்ட்டில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

கேப்ரியல் புயல் "முன்னோடியில்லாத இயற்கை பேரழிவு’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேப்ரியல் தற்போது ஆக்லாந்திற்கு வடகிழக்கே 200 கி.மீ. தொலைவில் அமர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு கடற்கரைக்கு அருகில் நகரும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக நேற்று ஆக்லாந்து மற்றும் மேல் வடக்கு தீவு முழுவதும் பல பள்ளிகள் மூடப்பட்டது.       

new-zealand-flood-viral-video