சிக்கலில் நியூசிலாந்து அணி : கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா

COVID-19 New Zealand Kane Williamson
By Irumporai Jun 10, 2022 03:46 AM GMT
Report

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சிக்கலில் நியூசிலாந்து

இந்த தகவலை  நியூசிலாந்து அணியின் கேப்டன் கேரி உறுதி செய்துள்ளார். கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அடுத்த ஐந்து நாள்களுக்கு வில்லியம்சன் தனிமைப்படுத்துப்பட்டுள்ளார்.

சிக்கலில் நியூசிலாந்து அணி : கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா | New Zealand Captain Kane Williamson Tests Covid 19

புதிய கேப்டன்

ஆகவே கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டோம் லாதம் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக செயல்படுவார் என்றும் வில்லியம்சனுக்கு பதிலாக ஹேமிஷ் ரூதர்ஃபோர்டு இன்றைய போட்டியில் களமிறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது .

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டவை இப்போட்டிகள் என்பதால் இவை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.