இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்திாயசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ரன்குவித்த இந்தியா
நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதுல் போட்டியில் நியூசிலாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 80 ரன்களும், ஷிகர் தவான் 72 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 306 ரன்களை குவித்தது.
வெற்றி பெற்ற நியூசிலாந்து
307 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லேதம் மற்றும் வில்லியம்சன் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச்செய்தனர்.
சிறப்பாக விளையாடி டாம் லேதம் தனது சதத்தை நிறைவு செய்தார். இதனால் 47.1 ஓவர்களிலேயே அந்த அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை அடைந்தது.
அதிகபட்சமாக டாம் லேதம் 145 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 94 ரன்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் உம்ரன் மாலிக் 2 விக்கெட்களை வீழ்த்தினார். டாம் லேதம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.