வில்லியம்சனுக்கு இடமில்லை - நியூசிலாந்து அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வில்லியம்சனுக்கு இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 போட்டிகள்
இந்தியாவில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11 முதல் 31 வரை நடைபெறவுள்ள இந்த தொடரில், முன்னணி வீரர் கேன் வில்லியம்சன் விளையாடவில்லை.
நியூசி அணி
ஒருநாள் தொடருக்கான கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் மிட்செல் சாண்ட்னருக்கு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு, டி20 தொடருக்கு மட்டும் அவர் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருநாள் அணியில் தமிழக வம்சாவளியை சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் ஆதி அசோக் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளார்.
டெவன் கான்வே, டேரில் மிட்செல் மற்றும் ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்கள் அணியில் நீடிக்கின்றனர். ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியை நியூசிலாந்து எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.