பிரதமர் மோடியின் செய்தி போட்டோ எல்லாமே சுத்த பொய் : விளக்கம் கொடுத்த தி நியூயார்க் டைம்ஸ்

image pmmodi newyorktimes
By Irumporai Sep 29, 2021 11:20 AM GMT
Report

இந்தியப் பிரதமர் மோடி, குவாட் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கக் கடந்த 22-ம் தேதி அமெரிக்கா சென்றார். ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர். கடந்த 27-ம் தேதி இந்தியா திரும்பினார்.

மோடியின் அமெரிக்கப் பயணங்கள் குறித்து அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில் அமெரிக்காவில் செயல்படும் பிரபல நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் மோடி புகைப்படத்துடன், உலகின் கடைசி, சிறந்த நம்பிக்கை உலகின் மிகவும் அன்பான மற்றும் சக்திவாய்ந்த தலைவர் நம்மை ஆசீர்வதிக்க இங்கே இருக்கிறார்' என்ற வாசகங்களோடு செய்தி வெளியானது.

இந்த  புகைப்படம் சமூக வலைத்தளங்களால் மிகவும் வைரல் ஆனது. இந்த புகைப்படம் போலியாக உருவானது என்று பலரும் கூறிவந்த நிலையில் அந்த தேதியில் வெளியான உண்மையான பக்கத்தின் புகைப்படத்தைப் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

இந்த நிலையில்  இந்த புகைப்படம் குறித்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை விளக்கம் அளித்துள்ளது. அதில்,இது முற்றிலும் புனையப்பட்ட படம். புழக்கத்தில் உள்ள பிரதமர் மோடியின் புனையப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

போலியாம புகைப்படங்களை போட்டோஷாப் செய்து  பரப்புவது தவறான தகவல்களையும், நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.