“பெரிய கவர்னர் போஸ்ட்டு...நீங்களே வச்சிக்கோங்க” - ராஜினாமா செய்த ஆண்ட்ரூ கியூமோ
நியூயார்க் மாகாண கவர்னர் பதவியை ஆண்ட்ரூ கியூமோ ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க் மாகாண கவர்னராக பதவி வகித்து வந்த ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத முறையில் பேசியதாக அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து புகார் தெரிவித்திருந்தனா்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞராக இருந்த அன்னா ருச் என்ற பெண் நிகழ்ச்சி ஒன்றில் தனது விருப்பமின்றி கியூமோ தன்னை அத்துமீறி தொட்டதாக குற்றம் சாட்டினார்.
மேலும் பல பெண்கள் ஆண்ட்ரூ மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்த அவரது கவர்னர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதேசமயம் அவர் இருந்த ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் மற்றும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நியூயார்க் மாகாண கவர்னர் பதவியை ஆண்ட்ரூ கியூமோ ராஜினாமா செய்துள்ளார்.