பதினொரு பெண்களுக்கு பாலியல் தொல்லை: பறிபோன கவர்னர் பதவி

andrewcuomo sexualharassment Resigning
By Irumporai Aug 11, 2021 10:44 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

அமெரிக்காவில் பாலியல் புகாரில் சிக்கிய, நியூயார்க் நகர கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ, பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஆண்ட்ரூ குவோமோ, 11 பெண்களிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கவர்னர் எந்த நேரத்தில் எந்த இடத்தில் தொடுவாரோ என அச்சத்துடன் அலுவலகத்தில் பணியாற்றி வருவதாக, பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கவர்னர் மீதான புகாருக்கு ஆதாரம் இருப்பதால் ஆண்ட்ரூ குவோமோ மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர, குடியரசு கட்சி முயன்றது.

மேலும், ஜனநாயக கட்சி எம்.பி.,க்களும், ஆண்ட்ரூ பதவி விலக வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில், அதிபர் ஜோ பைடன், ஆண்ட்ரூவை அழைத்து, பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, நியூயார்க் நகர கவர்னர் பதவியில் இருந்து, ஆண்ட்ரூ குவோமோ நேற்று விலகினார். இதையடுத்து, ஜனநாயக கட்சியின் முன்னாள் எம்.பி., கேதி ஹோச்சுல், நியூயார்க்கின்57வது கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.

இதன் மூலம் முதல் பெண் கவர்னர் என்ற சிறப்பினை பெறுகிறார் கேதி ஹோச்சுல்.