புத்தாண்டு கொண்டாட்டம்; அளவுக்கு அதிகமாக கூடிய மக்கள் - போலீசார் தடியடி
புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்பதற்காக கடற்கரை சாலையில் நுாற்றுக்கணக்கான மக்கள் குவிந்து வருவதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் போலீசார் தடியடி.
புதுச்சேரியில் குவிந்த மக்கள்
உலக நாடுகளில் புத்தாண்டு பிறந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிரிபாட்டி நாட்ல் முதலாவது நாளாக பிறந்தது.
அதை தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் நாடுகளில் பிறந்தது. இந்த நிலையில் இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு விடைபெற இன்னும் 1 மணி நேரங்களே உள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டை வரவேற்க பொது இடங்களில் திரண்டு வருகின்றனர்.
மக்கள் மீது போலீசார் தடியடி
முக்கிய சுற்றுலா தலமான புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்க கடற்கரை சாலையில் நுாற்றுக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்களை கலைந்து செல்ல போலீசார் எச்சரித்தும் கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.