புத்தாண்டை முன்னிட்டு தமிழக தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Special Prayer Churches New Year 2022
By Thahir Jan 01, 2022 12:19 AM GMT
Report

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி தமிழகத்தில்  பொது இடங்களில் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் முக்கிய தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்து சொல்லியும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்தனர்.

குறிப்பிட்ட சில கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு வழிபட்ட மக்கள் பின்னர் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

சென்னையில் ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு  மெரினா கடற்கரையிலும், கடற்கரை சாலைகளிலும் மக்கள் அதிகம் கூடுவது வழக்கம் . 

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு சென்னையிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது  மேலும் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மக்கள் சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை உள்பட சென்னையின் முக்கிய சாலைகள்  புத்தாண்டை கொண்டாட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

இரவு நேரங்களில் புத்தாண்டை கொண்டாட மக்கள் சாலைகளில் வலம் வருவதை தடை செய்யும் பொருட்டு சென்னையில் இரவு முழூவதும் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இரவு 12 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டன.