நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில் இனிமை சூழ்ந்து இன்னல் அகலட்டும் - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
2022 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு உலக நாடுகளில் வான வேடிக்கைகளுடன், அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஒமைக்ரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.
2022-ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்நிலையில், 2022 புத்தாண்டையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “நம்பிக்கையுடன் பிறக்கும் 2022 புத்தாண்டில் இனிமை சூழ்ந்து இன்னல் அகலட்டும்.
பேரிடரைக் கடந்து மக்கள் யாவரும் நலன் பெற்றிடும் ஆண்டாக 2022 அமைய விரும்பி, தமிழ்நாட்டு மக்களுக்கு நமது அரசின் சார்பில் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்”. என்று தெரிவித்துள்ளார்.