நீட் மோசடி புகார்களைத் தெரிவிக்க புதிய இணையதளம் அறிமுகம்
நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க தேசிய தேர்வு முகமை (National Testing Agency) புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் போலி வினாத்தாள்கள், விடை குறிப்புகள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் நபர்கள் குறித்து புகார் அளிக்க தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
MyGov தளத்துடன் இணைந்து https://innovateindia.mygov.in/neet-ug-2026 என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த தளம் 2026 ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
வினாத்தாள் இருப்பதாக கூறுபவர்கள், தேர்வில் தேர்ச்சி பெறச் செய்வதாக பணம் கேட்பவர்கள், அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடி செய்பவர்கள் குறித்து இதில் புகார் அளிக்கலாம்.
இதில் சம்பவ விவரங்கள், தேதி, நேரம் மற்றும் தொடர்புடைய சமூக வலைத்தளம், புகைப்படங்கள், இணையதள இணைப்புகள், ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யலாம்.
மேலும், தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இதுபோன்று சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கு https://www.nta.ac.in மற்றும் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தை மட்டும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசின் அறிவிப்பு தொடர்பாக சந்தேகங்களை PIB Fact Check வாட்ஸ்அப் எண் +91 8799711259 மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது