இனி பாரதி கண்ணம்மாவில் புதிய வெண்பா இவங்கதான் - ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவில் நடிகை பரினா நடித்து வந்த வெண்பா கதாப்பாத்திரத்தில் அவருக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலம் அனிதா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவது விஜய் டிவி சீரியல் பிரபலங்களின் விலகல் குறித்த செய்திகள் தான். அதில் குறிப்பாக பார்வையாளர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் சில புதிய மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது.
அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினா தற்போது கர்ப்பமாக இருப்பதால் அவர் இந்த சீரியலில் தொடர மாட்டார் என சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது தவிர இந்த சீரியலின் லீட் கதாப்பாத்திரமான கண்ணம்மா வேடத்தில் நடித்து வரும் நடிகை ரோஷினியும் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல்களின் உண்மை நிலவரம் தெரியாத பட்சத்தில் பாரதி கண்ணம்மா சீரியலின் வெண்பா கதாப்பாத்திரத்தில் பிக்பாஸ் பிரபலம் அனிதா நடிக்க இருப்பதாக தெரிகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்பான சில எடிட்டுகளில் அனிதா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.