புதிய வகை கொரோனா தொற்று - கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு!

Corona Government Variant New Order Central XE
By Thahir Apr 12, 2022 06:50 AM GMT
Report

புதிய வகை கொரோனா பாதிப்பு தொடர்பான கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் XE வகை கொரோனா குறித்து நிபுணர்கள்,அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.இன்று கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்துள்ளது.

வருகிற ஜுன் மாதம் இந்தியாவில் கொரோனா 4-வது அலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஐஐடி மாணவர்கள் கணித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் உலக நாடுகளில் XE வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அது இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கும் பரவினால் என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மாநில அரசுகள் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும் என கூறப்படுகிறது.