இன்று முதல் UPIல் புதிய மாற்றங்கள் - அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

India
By Sumathi Aug 01, 2025 12:31 PM GMT
Report

இன்று முதல் UPIல் புதிய விதிமுறைகள் இடம்பெற்றுள்ளது.

இன்று முதல் (ஆகஸ்ட் 01) UPI-யில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று NPCI ஏற்கனவே அறிவித்திருந்தது. என்னென்ன மாற்றங்கள்? என்பது குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

UPI Changes

UPI மாற்றங்கள்

  • நிலுவையில் உள்ள பரிவர்த்தனையின் நிலையை ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இடையில் குறைந்தபட்சம் 90 வினாடிகள் இடைவெளி இருக்கும்.
  • தானியங்கி பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் செயல்படுத்தப்படும். காலை 10 மணிக்கு முன், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 9:30 மணிக்குப் பிறகும் செயல்படுத்தப்படும்.
  • பயனர்கள் தங்கள் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பார்க்க முடியும். 30 நாட்களில் அதிகபட்சமாக 10 கட்டணங்களை திருப்பி அனுப்ப கோரிக்கைகளை எழுப்பலாம். 5 பயனர்கள் என்ற இடைவெளியில் அனுப்பலாம்.
  • கட்டணத்தை உறுதி செய்வதற்கு முன் பெறுநரின் பதிவு செய்யப்பட்ட வங்கிப் பெயர் மற்றும் விவரம் காண்பிக்கப்படும். இதனால், பிழைகள் மற்றும் மோசடிகள் குறைக்கப்படும்.
  • நாளைக்கு அதிகபட்சம் 50 முறை மட்டுமே வங்கி இருப்பைச் சரிபார்க்க முடியும். ஒரு பரிவர்த்தனை தோல்வியடைந்தால், அதன் நிலையை மூன்று முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.   

யுபிஐ பயன்பாட்டை நிறுத்தும் கடைகள் - அரசுக்கு எஸ்பிஐ வார்னிங்!

யுபிஐ பயன்பாட்டை நிறுத்தும் கடைகள் - அரசுக்கு எஸ்பிஐ வார்னிங்!