மக்களே பயப்படாதிங்க புதிய வகை XE கொரோனா இந்தியாவில் இல்லை : மத்திய அரசு விளாக்கம்
தென்னாப்பிரிக்காவில் இருந்து பிப்ரவரி 10 ஆம் தேதி நாடு திரும்பிய மும்பையைச் சேர்ந்த பெண்ணுக்கு XE வகை கொரோனா அறிகுறி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவத்தொடங்கியது. தொற்று முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என பாதிப்பை ஏற்படுத்தியது. வருகிற ஜூன் மாதம் நான்காம் அலை உருவாகும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சூழலில் கொரோனா குறைந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற தேவையில்லை என்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி,டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸை விட 10 மடங்கு வேகமாகப் பரவும் XE வகை வைரஸ் பிரிட்டன் உட்பட சில நாடுகளில் கண்டறியப்பட்ட நிலையில்,இந்தியாவில் மும்பையிலும் ஒருவருக்கு இருப்பதாக செய்திகள் வெளியானது .
இந்த நிலையில்,மும்பையில் புதிய வகை XE என்ற கொரோனா கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும், வைரஸ் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபருக்கு ஆய்வு செய்ததில் அவருக்கு XE வகை கொரோனாவுடன் ஒத்துப்போகவில்லை எனவும்,XE இருப்பதாக கூறப்பட்ட 50 வயது பெண் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.