வண்டலூர் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு புதிய வகை கொரோனா!

covid19 lion Tamilnadu newcorona vandalur
By Irumporai Jun 12, 2021 10:00 AM GMT
Report

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று  மனிதர்கள்  மட்டும் அல்ல விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை.

அமெரிக்கா நியூயார்க் சிட்டியில் உள்ள டிரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் புலி கொரோனா தொற்றால் முதலில் பாதிக்கப்பட்டது.

அதே போல், இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் முறையாக ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .

தற்போது கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சென்னைன்வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஏ பார்வையாளர்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 26-ந் தேதி பூங்காவிலுள்ள சிங்கங்களுக்கு தொடர் இருமல் இருப்பது ஊழியர்கள் மூலம் தெரியவந்தது.

. இதில் 19 வயது உடைய ராகவ் என்ற ஆண் சிங்கம் சார்ஸ் கோவிட்-2, டிஸ்டெம்பர் என்ற புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ குழுவினர் அந்த சிங்கத்தை தனிமைப்படுத்தி தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த புதிய வகை தொற்று பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கும் பரவாமல் இருப்பதற்காக பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.